சென்னை,
திமுகவில் இருந்து விலகிய, நட்சத்திர பேச்சாளர் ஆனந்தராஜ்-க்கு கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதிமுகவிலிருந்து விலகினால் கொன்றுவிடுவோம் என்று தன்னை மிரட்டியதாக  நடிகர் ஆனந்தராஜ் கூறி உள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களாக பல நடிகர், நடிகைகள் இருந்து வந்தனர்.
ஜெ.மறைவையடுத்து, சசிகலா கட்சி தலைமை பொறுப்புக்கு வருவதை பலர் விரும்பவில்லை. இதன் காரணமாக பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதுபோல் கடந்த சில நாட்களுககு முன்பாக அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகர் ஆனந்தராஜ் அறிவித்தார்.
அதிமுகவில் 12 ஆண்டுகள் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருபவர் ஆனந்தராஜ்.
கட்சியில் இருந்த விலயதை தொடர்ந்து நடிகர் ஆனந்தராஜ் வீட்டு தொலைபேசி,  செல்போன்  ஆகியவற்றில் தொடர்பு கொண்ட சிலர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும்  அவரது செல்போனுக்கு, கொலை மிரட்டல் விடுத்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது கொலை மிரட்டல் வந்துள்ளது குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார் ஆனந்தரா4.. போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிரட்டல் குறித்து நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது,
நான் 12 ஆண்டுகளாக அதிமுகவில், நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தேன். பல தேர்தல்களில் காங்கிரஸ், திமுக தலைவர்களை பற்றி விமர்சனம் செய்து பேசி இருக்கிறேன். ஆனால், எனக்கு எந்த ஒரு அச்சுறுத்தலோ, கொலை மிரட்டலோ வந்தது கிடையாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், எனக்கு அரசியலில் பிரவேசிக்க விருப்பம் இல்லை. அதனால், அதிமுகவில் இருந்து விலகினேன். ஆனால், என்னை அதிமுகவில் இருந்து விலக கூடாது என கூறி தொலைபேசியிலும், செல்போனிலும் சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றேன்.
அதுயார் என்று போலீசாருக்கும் தெரியும், அதிமுக நிர்வாகிகளுக்கும் தெரியும். அவர் அதிமுகவின் தொண்டராக இருந்தால், அவர் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜிக்கு தொலைபேசி மற்றும் செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரைப்பட நடிகர்,நடிகைகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகை விந்தியாவும்  கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.