சென்னை,
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் மதிமுக, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னனே கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை உடன் மதிமுக இணைந்து மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்த கட்சிகள் ஒருங்கிணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தன. அதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டது.
மேலும் காவிரி பிரச்சினை குறித்து  திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டணியில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் முடிவு செய்தது. ஆனால், அதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு வளர தொடங்கியது.
அதன்பிறகு மோடி அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற  அறிவிப்பை வைகோ வரவேற்று பேசினார். அதற்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்தனர். திருமாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக வைகோ இன்று அறிவித்து உள்ளார்.