ஊட்டி:
ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்லாத்திமட்டர்ம் என்ற இடத்தில் 20 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் கனகராஜ், பிரதாப், ஆறுமுகம், கார்த்திகேயன், காமராஜ் ஆகிய 5 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் கனகராஜை அருகில் இருந்த சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு குன்னூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மீதமுள்ள 4 பேர் மண்ணுக்குள் புதைந்துவிட்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கலெக்டர் சங்கர் உத்தரவின் பேரில் தீயணைப்பு துறையினர் மூலம் மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel