சென்னை,
இன்று 70வது பிறந்தநாள் காணும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து’
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகப் பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:
”இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் நீண்ட ஆரோக்கியமான உடல் நலத்துடன் திகழ, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.