maaveeran-kittu-screenplay
மாவீரன் கிட்டு

80களில் நடந்த ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை சொல்லும் படமாக வெளியானது மாவீரன் கிட்டு திரைப்படம். படம் வெளியான நாள் முதல் இன்று வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் திரைக்கதையில் மாற்றத்தை செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருக்கும் மாவீரன் கிட்டு படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்களுக்கு வந்த கருத்துகளின் அடிப்படையில் படத்தின் இரண்டாம் பாதியில் சில மாற்றங்களை செய்துள்ளோம். அது நிச்சயம் மக்களை இன்னும் அதிகமாக திருப்திபடுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

[youtube-feed feed=1]