சென்னை,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து நாடு முழுவதும் அவரது கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அதிர்ச்சி காரணமாக மரணமடைந்தனர். அவர்களுககு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 5ந்தேதி நள்ளிரவு ஜெயலலிதா மரண செய்தி அறிவிக்கப்பட்டது. அவரது மரண செய்தியை தாங்கமால் அதிர்ச்சியில் இருவரை 77 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் குடும்பத்தாருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். அறிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ந்தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை தாங்கிகொள்ள முடியாத அதிர்ச்சியில் இதுவரை உயிரிழந்த 77 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது.