தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது.
மரியாதைக்குரிய நம்முதல்வரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel