சென்னை,
வலைக்கிடமான நிலையில் உள்ள முதல்வரை காண , விடுதலைசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  அப்பல்லோ வந்ர்தா. அப்போது அவர் கூறியதாவது,
thiruma
 
வரலாற்று சாதனையாளர் –  திருமாவளவன்
ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண்ணாக போராடி இந்திய அரசியல் வானிலே வரலாற்று சாதனையாளராக நீடித்த புகழுடன் விளங்கி வருகிறார் நம் முதல்வர்.
ஜாதி, மதங்களையெல்லாம் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய பெருந்தலைவராக இயங்கி வந்திருக்கிறார்.
கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் லட்சோப லட்ச விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து முதல்வர் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறோம்.
முதல்வர் நலம் பெற வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகாலம் வெற்றிகரமாக அதிமுகவை வழிநடத்தியதோடு உலகத்தமிழர்கள் அனைவரும் போற்றத்தக்கவகையில் விளங்குகிறார்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.