சென்னை,
முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த செப்டம்பர் 22ந்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டு , அதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரன சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
விரைவில் வீடுதிரும்புவார் என்று எதிர்பார்த்த் நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் உடல்நிலை குறித்த வதந்தி நாடு முழுவதும் பரவியது. அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்பட்டது.
முதல்வர் குணமடைய வேண்டிய நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பிரார்தனை செய்வதாக கூறி வந்தனர். கவர்னர் வித்யாசாகர்ராவும் உடனடியாக சென்னை திரும்பி, மருத்துவ மனை வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
அதிமுக தொண்டர்கள் கூட்டம் மருத்துவமனையை முற்றுகை யிட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முதல்வருக்கு இருதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்பல்லோ வரட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் இதய நாளத்தில் ரத்த ஓட்டம் செய்யப்பட்டது.
தற்போது முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக முதல்வர் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் வெளியே வரும்.