இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டம் கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் நேற்று நடந்தது. இப்போட்டியில் கோவா எப்.சி. மற்றும் சென்னையின் எப்.சி. அணிகள் மோதினர், இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், போட்டி ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக கோவா எப்.சி. அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தியது.
சென்னை அணி சார்பாக முறையே ஜெர்ரி, அர்னோலின், டுடு, ரைஸ் ஆகியோர் ஒரு கோல் அடித்தனர். கோவா அணி சார்பாக ஜோப்ரே 2, டவோரா 2, லூயிஸ் 1 கோல் அடித்தனர். கோவா 14 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், சென்னை 15 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும் உள்ளது.
Patrikai.com official YouTube Channel