ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், கோலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை முந்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோ ரூட் 2-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார். முகமது சமி 2 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தில் உள்ளார். முதல் முறையாக சமி டாப் 20 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.