நெட்டிசன்:
சுந்தர் (Sundar Sundar) அவர்களின் முகநூல் பதிவு:
நான் வசிக்கும் சத்தியமங்கலம் பகுதியில் நடக்கும் கொடுமை இது.
தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் வடஇந்தியர்கள் மைசூரிலிருந்து சத்தியமங்கலம் வரும் வழியில்…….
தங்களது மனநிலை பாதிக்கப்பட்ட சொந்தக்காரர்களையும் அழைத்து வந்து..
தமிழக எல்லையில் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பண்ணாரி அம்மன் கோயிலில்
இறக்கி விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார்கள்…
அங்கே மதிய உணவு மட்டுமே வழங்கப்படுகிறது….
-ஏதோ சொர்கத்துல சேர்த்த மாதிரி நெனச்சுக்குறானுக…
மனநிலை சரியில்லாத சிலர் பசியால் அலைந்து திரிந்து கிழக்குநோக்கி 12 கிமீ நடந்து சத்தியமங்கலம் வந்து நம்மிடம் தனக்கு தெரிந்த மொழியில் கேட்டு உணவுக்காக கையேந்துகிறார்கள்…..பாவம்.
ஆனால்……கொடுமை என்னவெனில்…
பெரும்பாலானோர் வடக்கு நோக்கி அடர்ந்த காட்டுக்குள் சென்று புலிக்கு உணவாகிறார்கள்.அடிக்கடி நடப்பது இது. வெளியுலகுக்கு அதிகம் தெரியாது.
(சத்தியமங்கலம் காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு மனிதர்கள் நுழையத் தடை செய்யப்பட்ட பகுதி)
இன்று மதியம்கூட
மனநிலை சரியில்லாத ஒருவர் புலியால் கொல்லப்பட்டார்.
அடப்பாவிகளே…! காசியும்,கங்கையும் பக்கத்திலேயே இருக்கும்போது இங்க ஏன் காட்டுக்குள் கொண்டுவந்து விட்டு குழந்தைகளுக்கு நிகரான அவர்களைப் புலிகளுக்கு உணவாக்கி சாகடிக்கிறீர்கள்?