சென்னை,
சில்லரை பிரச்சினைக்காக ஸ்வைப் மேஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற காரணத்தினால் சில்லரை தட்டுப்பாடும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லரை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பணப்புழக்கம் சரியாகததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
taxmac3
இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், டாஸ்மாக் வருமானத்தை கூட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணப்பிரச்சினையை போக்குவதற்கு ஸ்வைப் மெஷின் உபயோகப்படுத்தி கார்டு மூலம் சரக்குகள் விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
தற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் நிறைய பேர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளனர். இதன் காரணமாகவும் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு 12 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை குறைந்துள்தாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில் சராசரியாக தமிழகம் முழுவதும் 85 கோடி ரூபாய் வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை இருக்கும்.
taxmac4
தற்போது விற்பனை குறைந்துள்ளதால், விரைவில் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்டு பர்சேஸ் முறையை கொண்டுவர அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கடைக்கும் ஸ்வைப் மெஷின் கொடுத்து விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே  `எலைட்` மதுபான கடைகள் மற்றும் ஹைடெக்கான மதுபான பார்களிலும் `ஸ்வைப் மெஷின்கள்` பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.