Beep-Song

சென்னை:

ருவெறுப்பான பீப் பாடலை உருவாக்கி, பாடியதோடு, அது எனது தனிப்பட்ட விஷயம் என்று பேட்டியும் அளித்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார் நடிகர் சிம்பு.

இந்த நிலையில், சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், சிம்புவை எந்த நேரமும் காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சிம்பு தாக்கல் செய்த ட மனுமீதான விசாரணை நடந்தது. அப்போது சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் ஜனவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி. அதே நேரம் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதனால் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை கமிசனர் அலுவலகத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சிம்பு, அனிருத் இருவரும் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விளக்க கடிதம் மட்டும் கொடுத்தனர். இதற்கிடையே மீண்டு் சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பத்திரிகையாளர் பிஸ்மி, சைதை கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறார்.  அதோடு சைபர் க்ரைம் பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிலகட்சிகளும் சிம்பு மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.  ஆகவே சிம்புவை கைது செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்கிடையே கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருக்கும் சிம்பு, தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வேன் என்றும் கூறி வருகிறார்.

கோர்ட் உத்தரவால் சிம்புவின் குடும்பத்தினர் பதட்டமடைந்திருக்கிறார்கள். சிம்பு ரகசியமான இடத்தில் பதுங்கி இருக்கிறார். ஏற்கெனவே பெங்களூருவில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது சென்னையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு சிம்பு ஒத்துழைப்பாரா அல்லது தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்வாரா என்பது இன்று நள்ளிரவு அல்லது நாளை தெரிந்துவிடும்.