
பாகுபலி படத்தின் முதல் பாதி சென்ற ஆண்டு வெளியாகி உலகம் முழுவது வசூல் மழையை பொழிந்தது, அதன் தொடர்ச்சியாக இந்த சாதனையை முறியடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் 2 பாய்ண்ட் ஓ திரைப்படம் உள்ளது, இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
பாகுபலியின் தொடர்ச்சியாக பாகுபலி-2 தி கண்குலூஷன் திரைப்படத்தை 2 ஆண்டுகளாக இயக்கிவரும் ராஜமௌளி இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளாராம் ஆனால் அதற்கிடையில் இப்போது இத்திரைப்படத்தின் வார் சீக்குவண்ஸ் இணையதளத்தில் வெளியாகிவுள்ளது.
இதில் பிரபாசும் அனுஷ்காவும் எதிரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர் அதன் பின் சண்டைக்கு தயாராகுவது போல் காட்சியை வெளியிட்டுள்ளதால் இதை பார்த்த ராஜமௌளி ஆதிர்ச்சியடைந்துள்ளாராம்.
என்ன தான் கோழிக் கொழம்ப மூடிவெச்சாலும் வாசம் காட்டி கொடுத்துடுமுல்ல….
Patrikai.com official YouTube Channel