சென்னை,
ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும் என்று காங்கிரஸ் விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நுற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பாக தா. பாண்டியன், தி.மு.க. சார்பாக டி.கே.ஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விடுதலைசிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், “மோடியின் இந்த திட்டத்தால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். உண்மையில் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நன்றி கூற வேண்டும்.. ராகுல்காந்தி பிரதமர் ஆக வழி செய்துவிட்டார்.
இந்திராகாந்தியின் ஆட்சிதிறன், அரசியல் ராஜதந்திரம், ஒடுக்கபட்ட மக்கள்மீது அவர் எடுத்து கொண்ட அக்கறை ஆகிய அள்பறிய முடியாத ஒன்று. ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேரவேண்டும்” என்றார்.
மேலும் அவர், “திராவிடக் கட்சிகள் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் கவுன்சிலர்பதவிக்கு வருதே கஷ்டமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும்போதுதான் தாழ்த்தப்பட்டவர்கள் தலைவர்களாக வர முடிகிறது!” என்றார்.