ரூபாய் நோட்டு தடையை அடுத்து கேரள மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றும் உரிமையை மத்திய அரசு தடை செய்ததால் கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்துள்ளது.

pinarayi_vijayan

மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மாற்றும் உரிமையை வழங்கியுள்ளது ஆனால் அந்த உரிமை கேரள மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு வழகாமல் தடை செய்து வைத்துள்ளது. கேரள மாவட்ட கூட்டுறவு வங்கி என்பது 52 ஆயிரம் கோடி டெப்பாசிட் மற்றும் 30 ஆயிரம் கோடி கடன்கள் என்று பரந்து விரிந்த நெட்வொர்க் ஆகும். அரசின் இந்த நடவடிக்கை மூலம் அந்த 52 ஆயிரம் கோடி டெப்பாசிட் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்த வங்கிகளில் பெருமபாலானவை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான பகிரங்க போராட்டத்துக்கு கேரள முதல்வர் பிரணாயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றுறு காலை திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கி முன்பாக காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்க்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளுள் பாஜகவும் அடக்கம்.
கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா அரசின் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.