சென்னை மாவட்டத்தின் சார்பில் இந்த வருடத்திற்கான முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் நடக்க இருக்கிறது. இந்த விளையாட்டு போட்டியில் தடகளம், ஜூடோ, வாள்சண்டை, பளுதூக்குதல், பீச் வாலிபால், தேக்வாண்டோ ஆகியவை நாளையும், ஹேண்ட்பால், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவை 20-ந் தேதியும், குத்துச்சண்டை 28, 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
மேலும் சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரேம்குமார் கூறியதாவது, 1-1-1996-க்கு பிறகு பிறந்தவர்களே இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என்றும், 31-12-2016 அன்று 21 வயது முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்க மேலும் தகுதியானது சென்னையில் பிறந்தவராகவோ அல்லது படிப்பவராகவோ அல்லது பணிபுரிபவராகவோ இருக்க வேண்டும். முதல் மூன்று இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு ஊக்கத்தொகை, பரிசளிப்புகள் வழங்கப்படும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளிலும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.