marathon-chennai

சென்னை மாராத்தான் போட்டி, சென்னையில் டிசம்பர் 11 நடைபெறவுள்ளது. வெற்றி பெற உள்ளவர்களுக்காக பரிசு தொகை 17.20 லட்சம் எனவும் அறிவிப்பு.

டிசம்பர் 11-ல் தி விப்ரோ சென்னை மாரத்தான் போட்டி நடத்த இருப்பதாக மாரத்தான் போட்டி இயக்குநர் தீபா பரத்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, மாரத்தான் போட்டிக்கு சென்னை ரன்னர் அமைப்பு துணையுடன், முழு மாரத்தான் (42.2 கி.மீ), அரை மாரத்தான் ( 21.1 கி.மீ), 10 கி.மீ. தூர ஓட்டம் ஆகிய 3 பிரிவாக நடத்த இருப்பதாகவும் மொத்த பரிசுத்தொகையாக ரூ.17.2 லட்சம் எனவும், இந்த போட்டியில் 20 ஆயிரம் நபர்களை எதிர்பார்த்து முன்பதிவு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த மாராத்தான் போட்டியானது ‘கும்தலக்கடி கும்மா சென்னைனா சும்மாவா’ என்ற வாசகத்துடன் முழு, அரை மாரத்தான் போட்டிகள் சென்னை மத்திய கைலாஷ் அருகே உள்ள எம்ஆர்பி ஸ்டேஷன் பகுதியில் இருந்தும் , 10 கி.மீ. போட்டி நேப்பியர் பாலம் அருகேயும் , ஆரம்பிக்கும் நேரமானது முழு மாரத்தான் அதிகாலை 4 மணிக்கும், அரை மாரத்தான் காலை 4.30 மணிக்கும், 10 கி.மீ. ஓட்டம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மூன்று போட்டிகளும் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நிறைவு பெரும் என்றும் தெரிவித்தார்.