சென்னை,
வங்கிகளுக்கு பணம் மாற்ற வருபவர்களின் விரலில் ‘மை’ வைக்கும் பணி இன்று சென்னை வங்கியில் தொடங்கியது. இதன் காரணமாக வரும் நாட்களில் வங்கிகளில் கூட்டம் குறையும் என நம்பப்படுகிறது.
வங்கியில் பணம் வாங்பகுவர் கையில் மை வைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்த்ர்.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் காணப்படும் கூட்ட நெரிசல் குறித்து ஆய்வு செய்ததில், ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. ஆகவே ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்தால் வங்கியில் கூட்டம் குறைந்துவிடும் என மத்திய அரசு கருதுகிறது.
அதையொட்டி, இன்று முதல் பணம் வாங்க வருபவர்களுக்கு மையில் மை வைக்கப்படும் என்றும், சென்னை போன்ற பெருநகரங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் நேற்று தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகாவில் இயங்கிவரும் மை தயாரிப்பு நிறுவனம், அழியாத மையை இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு நேற்று முதல் அனுப்பி வருகிறது.
மை கிடைக்கப்பெற்ற வங்கிகளில் இன்று முதல், பணம் மாற்ற வருபவர்களுக்கு அடையாள மை வைக்கும் பணி தொடங்கியது.
சென்னையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூபாயை மாற்ற ‘மை’ வைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான நகர வங்கிகளில் விரலில் மை வைக்கும் பணி தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.