பிரதமர் மோடியின் “செல்லாது” அறிவிப்பை கமல், ரஜினி ஆரம்பித்து நண்டு சிண்டு நட்சத்திரங்கள் வரை புகழ்ந்துகொண்டிருக்கின்றன.
mansoor-alikhan-2
ஆனால், மோடியின் அறிவிப்பு மக்களை ராப்பிச்சைக்காரனாக ஆக்கிவிட்டது என்று பொங்கிவிட்டார் நடிகர் மன்சூர் அலிகான்.
‘கொஞ்சம் கொஞ்சம்’. படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் தன் ஆவேசத்தை வெளிப்படுத்தினார் மன்சூர்.
மேடையில் பேசிய பலரும் சினிமா பற்றியே பேச, இவரும் அதில்தான் ஆரம்பித்தார். பிறகு தன் ஆதங்கத்தைக் கொட்ட ஆரம்பித்துவிட்டார்:
“இன்று காலை நான் வேறொரு படப்பிடிப்பில் நடித்திருக்க  வேண்டும். ஆனால் அந்தப் படப்பிடிப்பிற்கு தேவையான பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வர அதிக நேரமாகும் என்பதால் படப்பிடிப்பை மதியத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்கள்.
mansoor-alikhan-1
சினிமா தியேட்டர்களில் கூட்டமே இல்லை. மக்கள் கைககளில் பணம் இருந்தால்தானே தியேட்டருக்கு வருவார்கள். பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சினிமா துறையே முடங்கிவிட்டது. இதற்கு திரையுலகத்தினர் கடும் கண்டனம் தெரிவிப்பது அவசியம்.  தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்கள் என்று எல்லோரும்  எதிர்க் குரல் எழுப்ப வேண்டும்.
இது நமது  கொடுக்க வேண்டியது நமது கடமை.
சினிமா மட்டுமல்ல.. எல்லா தொழிலும் முடங்கிக் கிடக்கிறது. சில்லறைக்காகவும் செல்லுகிற நோட்டுக்காகாகவும் மக்கள் வீதி, வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நாள் முழுக்ககாத்துக் கிடக்கிறார்கள்.
konjam_konjam_movie_audio_launch_stills-1
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு என்று ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நான்கு தடவை அதனை பாக்கெட்டில் வைத்தால், கிழிந்துவிடும். அவ்வளவு மோசமாக இருக்கிறது.
நமது திரைப்பட கலை இயக்குநர்களிடம் கேட்டிருந்தால்கூட இதைவிட நல்ல நோட்டை தயார் செய்திருப்போம்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதை.. ஒழிக்க நினைப்பதை அனைவருமே வரவேற்கிறோம். அதே நேரம்.. அதற்கான முன் ஏற்பாடுகள் எதையுமே செய்யாமல் பிரதமர் மோடி இரவாடு இரவாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து பெரும் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டார். மக்கள் அனைவரையும் ஒரே நாள் இரவில் ராப்பிச்சைக்காரனாக்கிவிட்டார்..” என்று கொட்டித் தீர்த்துவிட்டார் மன்சூர்.