ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை கள்ள நோட்டாக மாற்றுவது கடினம் என்று பலரும் கூறிவந்த வேளையில் கர்நாடகாவின் சிக்மகளூர் பகுதியில் புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் உலவிவருவதாக தெரிகிறது.
கர்நாடகாவில் வெளிவரும் “விஜய் கர்நாடகா” என்ற பத்திரிக்கை இந்த கள்ளநோட்டு ஏபிஎம்சி மார்கெட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. கள்ள நோட்டின் நிறம் மற்றும் அது கட் செய்யப்பட்ட விதத்தை பார்க்கும்போது சந்தேகம் ஏற்பட்டதால் அதை தீவிரமாக ஆராய்ந்தபோது அது கள்ளநோட்டு என்று தெரியவந்ததாக அந்த பத்திரிக்கை தெரிவிக்கிறது.