unnamed-8
ஒரு புறம் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்த கூடாது என்று விலங்குகள் நல வாரியம் கூறுகின்றது, மற்றொரு புறம் ஜல்லிக்கட்டை நடத்த வில்லை என்றால் நாட்டு மாடுகள் இனமே அழிந்தி விடும் என்று கூறப்படுகின்றது. இதுபோன்ற சூழல் தமிழ்நாட்டில் இருக்கும்போது ஜே.ஜூலியன் பிரகாஷ் என்பவர் இளமி என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த இளமி கதை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எப்படி நடத்தப்பட்டது என்பதை கூறப்போகின்றதாம் இதை பற்றி இயக்குனரிடம் கேட்டப்போது அவர் கூறியதாவது :-
இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி நாணூறு வருடங்களுக்கு முன்பு இல்லை. மாட்டை ஓடவிட்டு பின்னால் ஓடி அடக்குவது இப்போதைய ஜல்லிக்கட்டு. நானூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஜல்லிக்கட்டுக்கு பேர் வடம் ஜல்லிக்கட்டு. சீறி வரும் களையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு. அதை தான் இதில் பதிவு செய்திருக்கிறோம்.
த்ரிலிங்கான சம்பவங்களுடன் திரைக்கதை பரபரப்பாக அமைக்கப்பட்டு படமாகப்பட்டுள்ளது.
unnamed-7
“ தீ பறக்க முட்டி பாரு திமில நீயும் தொட்டு பாரு எங்க ஊரு ஜல்லிக்கட்டு எதிர நின்னு மல்லுக்கட்டு “ என்ற ஜல்லிக்கட்டு பற்றிய பாடல் காட்சி ஒன்று தேனி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது. யுவன், அனு கிருஷ்ணா, வில்லனாக நடிக்கும் கல்லூரி அகில் உட்பட பல நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.
நாம் யாரும் பார்த்திடாத, கேட்டிடாத புது மாதிரியான ஜல்லிக்கட்டை இளமியில் பதிவு செய்திருக்கிறோம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இத்திரைப்படத்தை ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது.