வாஷிங்டன்:
திபர் தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா  பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த  வாய்ப்புள்ளதைக  அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
1
அமெரிக்க அதிபர் ஒபமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதையடுத்து  அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 8ம்  தேதி  நடைபெற இருக்கிறது.  ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக பிரபல தொழிலதிபரான சர்ச்சை நாயகர்  டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நியூயார்க், டெக்சாஸ், விர்ஜினியா உள்ளிட்ட சில இடங்களில் உள்ள அதிகாரிகளை, கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.  மேலும்  தீவிரவாத ஒழிப்பு கூட்டுப் படைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2011 இரட்டை கோபுர தாக்குதல்
2011 இரட்டை கோபுர தாக்குதல்

ஆனால், இதுகுறித்து எந்த கருத்தையும் எஃப்பிஐ குறப்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.  ஆனால்,” அமரிக்காவில்  உள்ள, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும்” என்று பொதுவான அறிக்கை  கடந்த வெள்ளிக்கிழமை  எஃபிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதியன்று அமெரிக்கா மீது அல்-கொய்தா  பயங்கரவாத  அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த தாக்குதல்களில் சுமார்  மூன்றாயிரம் பேர் பலியானார்கள்.  இது அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப் பெரிய பங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது.