டில்லி,
ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

டில்லியில் கடந்த செவ்வாய் கிழமை பூங்கா ஒன்றில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரரான ராம் கிஷன் கிரெவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார்.
அப்போது இந்தியா கேட் அருகே அவரை தடுத்து நிறுத்திய போலீசார் , அவரை கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
இரண்டு மணி நேரம் காவல்நிலையத்தில் அமர வைக்கப்பட்ட ராகுல்காந்தி, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ராகுல் கைது குறித்து பேசிய, காங்கிரஸ்தலைவர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங், ‘எமர்ஜென்சி காலத்தை விட மோசமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட ராகுல் உடனடியாக துக்ளக் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் ராகுல் கைதாவது இது மூன்றாவது முறையாகும்.
தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரின் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
ராகுல்காந்தியும், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
Patrikai.com official YouTube Channel