திருப்பதி,
திருமலையில் நடந்து வரும் பக்தர்களுக்காக ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ என்ற புதிய வளாகம் திறக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் திருமலையில் நடைபாதை வழியாக வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ நேற்று திறக்கப்பட்டது.

இதனை திருமலை– திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து, சாம்பசிவராவ் கூறியதாவது,
இந்த காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்களின் உடைமைகள்,உணவுகள் வைப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இந்த காம்பளக்ஸ் கட்டப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel