டில்லி,
வீட்டு தேவைக்கு உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அக்டோபர் 28-ஆம் தேதியன்று ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.501-ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.37.50 உயர்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.538.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மானியம் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.418.14-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், வங்கிக் கணக்கு இணைப்புடன் கூடிய வீட்டு சமையல் எரிவாயு (மானியம் அல்லாத) நுகர்வோருக்கு அவர்களது கணக்கில் ரூ.120.36 சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1,34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2,37 பைசாவும் அதிகரித்து உள்ளது.