டென்மார்க்: உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் நோக்கத்துடன் காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் விஃபுட் என்ற சூப்பர் மார்க்கெட் டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
[embedyt] http://www.youtube.com/watch?v=F-ZlzRpdC5w[/embedyt]
கிட்டத்தட்ட காலாவதியாகும் நிலையில் இருக்கும் உணவுப்பொருட்கள், மற்றும் அழகுசாதன பொருட்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இப்பொருட்கள் 30% முதல் 50% வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. இந்த சூப்பர் மார்க்கெட் துவங்கப்பட்ட முதல் நாளே மக்கள் வரிசையில் நின்று பொருட்களை ஆவலுடன் பார்த்து வாங்கிச் சென்றனர்.
இதுபோன்றதொரு அங்காடி தொடங்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறையாகும். இந்த அங்காடியை டென்மார்க்கில் உள்ள ஃபுட் பேங்க் என்ற ஒரு அமைப்பும் டான்சர்ச் எய்ட் என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து நடத்துகின்றன. இந்த அங்காடியின் மூலம் வரும் வருமானம் டான்சர்ச் எய்ட் நிறுவனத்தின் மூலம் கிழக்கு சூடான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வாழும் ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதுபோன்ற அங்காடிகளை டென்மார்க் முழுவதும் துவங்க டான்சர்ச் எய்ட் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.