சென்னை,
மிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்,

ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று, தென்பகுதியில் பரவி மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்றார்.
மேலும்,  தமிழகத்தை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் திருவை யாறில் 7 செ.மீட்டரும், கடலூர், திருவாரூர், பெரம்பலூர் பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழையும், திருச்சி முசிறியில் 5 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளதாக தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும்,
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலோ அல்லது அதை விட குறைவாகவோ பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த வருடத்திற்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கியது. அக்டோபர் 30-ந்தேதி யான இன்றுடன் முழுமையாக முடிவடைந்தது