அமெரிக்காவின் சியாட்டில் நகரைச் சேர்ந்த கேத்தரின் ஸ்டோன் என்ற 21 வயது பெண் தனது கன்னித்தன்மையை 400,000 டாலர்களுக்கு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்காக நான் எனது கன்னித்தன்மையை பாதுகாத்து வைக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்டோனின் பெற்றோர்கள் வசித்த சியாட்டிலில் உள்ள பாரம்பரிய வீடு தீக்கிரையானதாகவும் அவர்களுக்கு வீடுகட்டித் தந்து அவர்கள் கஷ்டத்தை போக்க தான் தனது கன்னித் தன்மையை ஏலம் விடும் முடிவுக்கு வந்ததாகவும் ஸ்டோன் கூறுகிறார். மற்றபடி ஸ்டோனின் லட்சியம் ஒரு வழக்கறிஞர் ஆவதுதானாம்.
தீக்கிரையான தனது வீடு இன்ஸ்யூர் செய்யப்படவில்லை, ஸ்டோன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக தனது உறவினர்கள் வீட்டுக்கு இடம் பெயர்ந்துவிட்டார் ஆனால் அவரது பெற்றோர் இன்னும் அதே வீட்டில்தான் வசித்து வருவதாகவும், பில்களைக் கட்டக்கூட கஷ்டப்பட்டு வருவதாகவும் ஸ்டோன் தெரிவித்தார்.
தனது கல்லூரி படிப்புக்கு பணம் கட்டுவதற்காக நாட்டாலி டைலான் என்ற பெண் நெவேடா மாகாணத்தில் ஏழு விபச்சார விடுதிகளை வைத்திருக்கும் டென்னிஸ் ஹாஃப் என்பவரை தொடர்புகொண்டு அவர் மூலம் தனது கன்னித் தன்மையை ஏலம் விட்டதைக் குறித்து கேள்விப்பட்ட ஸ்டோன் டென்னிஸ் ஹாஃபை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே சி.என்.என் சேனலில் பிரபலமான “திஸ் இஸ் லைஃப்” என்ற நிகழ்ச்சியில் ஸ்டோனின் பேட்டி ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கேத்தரின் ஸ்டோனின் விண்ணப்பத்தை முதலில் ஏற்க மறுத்த டென்னிஸ் ஹாஃப் இறுதியில் அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார், ஸ்டோன் மிக நல்ல பெண், இப்போது என் குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார் என்கிறார் ஹாஃப்.
தான் தனது பெற்றோரை விரும்புவதாகவும் அவர்களுக்காக இதை நான் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும். மற்றபடி தனக்கு பாலியல் தொழிலில் நாட்டமில்லை என்று “திஸ் இஸ் லைஃப்” நிகழ்ச்சியில் ஸ்டோன் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பலர் திட்டியும் சிலர் அறிவுரை சொல்லியும் வருகின்றனர். ஆனால் ஸ்டோன் அவற்றை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 400,000 டாலர்கள் என்பது ஆரம்பம்தான். நான் இன்னும் அதிக தொகை ஏலத்தில் கேட்கப்படட்டும் என்று காத்திருக்கிறேன் என்கிறார்.