சென்னை:
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“தஞ்சாவூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் என்னை தாக்க முயன்றனர்.
தற்போது சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் எனக்கு துப்பாகி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது