பயங்கரவாத இயக்கங்களை களையெடுக்க நீங்கள் தவறினால் நாங்களே தனியாக களத்தில் இறங்கி செயல்படவேண்டியது வரும் என்று அமெரிக்கா பாகிஸ்தானை நேரடியாக எச்சரித்துள்ளது.

adam_szubin

பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதியுதவியை தடுக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆடம் சுபின் வாஷிங்டன் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தானும் அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயும் சில பயங்கரவாத இயக்கங்களை சகித்துக்கொள்வது எங்களுக்கு தெரியும். அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க தவறுவதை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போக்கு தொடர்ந்தால் நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி அந்த பயங்கரவாத இயங்களை அழிக்க தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கபட்ட ஒரு நாடுதான். பள்ளிகளிலும், வர்த்தக நிலையங்களிலும், மசூதிகளிலும் இன்னும் பல இடங்களிலும் நடந்த தீவிரவாத தாக்குதல்களால் அந்நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல நேரங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, உதாரணமாக வடமேற்கு பாகிஸ்தானில் அந்நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை சொல்லலாம். பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதலில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு முக்கியமான கூட்டாளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயங்கரவாத இயக்கங்களுடன் இணக்கமான போக்கை தொடர்ந்து கையாண்டு வருவது நல்லதல்ல என்று அவர் குறிப்பிட்டார்