சென்னை: தமிழகம் முழுதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நீர் புகுந்ததால் பாழாகிகிடக்கிறது.
இந்த கனமழைக்கு சென்னையும் தப்பவில்லை. சரியான வடிகால் வசதி இல்லாதது, ஏரிகள் போன்ற நீர் நிலைகளை சட்டத்துக்குப் புறம்பாக பிளாட் போட்டு விற்றது ஆகியவற்றால் தாழ்வான பகுதிகளில் வெளஅளம் புகுந்தது.
அடையாறு கரை ஓரப்பகுதியில் போடப்பட்டிருந்த எண்ணற்ற குடிசைகள் நீரில் மூழ்கின. அங்கு வசித்த மக்கள் தற்போது வீடின்றி தவிக்கிறார்கள்.
அதே போல வேளச்சேரி பகுதியிலும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் நான்கு அடி வரை வெள்ளம் இருப்பதால், படகு கொண்டு வரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டார்கள்.