சென்னை,
முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக சமுக சேவகர் டிராபிக் ராமசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இடையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மூன்று முறை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழுவும் அப்பல்லோ வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் அப்பல்லோ வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முதல்வர் உடல்நிலை குறித்து சரியான விவரம் தெரியாததால், சமூக வலைதளங்களில் அவர் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, போலீசார் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்காக 10பேர் கொண்ட சைபர் குழு அமைக்கப்பட்டு, சமூக வளைதங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தது.
அதையும் மீறி வதந்தி பரப்பியவர்கள் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிஷோர் என்பவர், முதல்வர் குறித்து வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே டிராபிக் ராமசாமி முதல்வர் உடல்நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொர்ந்திருந்தார். அது ஐகோர்ட்டு தலைமை நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.