சென்னை:
மிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
1
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் டிஸ்சார்ஜ் ஆக நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துமனை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தஞ்சையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும் கூட இந்தக் கோரிக்கையை எழுப்பினார்.
மறுநாள் (நேற்று) ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தார் ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வர் விரைவில் நலம் பெற வாழ்த்துவதாக தெரிவித்தார். பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என சொல்லவில்லை. ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே தான் கூறியதையும் நேற்று தெரிவிக்கவில்லை.
இதையடுத்து தனது அந்த கோரிக்கைகளை ஸ்டாலின் திரும்பப் பெற்றுவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் அவர், “தமிழகத்துக்கு புதிய முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த கருத்தைத் தெரிவித்தார். மேலும்,  தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.