டில்லி:
மிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வருகிறார்.
கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 15 நாட்களாகியும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார். ஆனால் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வந்து ஜெயலிதாவை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், நோய்  தொற்று ஏற்பட்டுவிடும் என அப்பல்லோ மருத்துவர்கள் அவரை சந்திக்க விடாமல் செய்தனர். அதன் காரணமாக அவர் முதல்வர் சீக்கிரம் குணமாகி வருவார் என்று அறிக்கை கொடுத்தார்.
jeya
அப்பல்லோ நிர்வாகமும் தினசரி ஒரு அறிக்கை கொடுத்து வருகிறது. அதில் முதல்வர் தேறி வருகிறார்.. ஆனால் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
இதற்கிடையில் முதல்வர் உடல்நலம் குறித்து வெளிநாட்டு மருத்துவர் பீலே சிகிச்சை அளித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து முதல்வர் உடல்நிலை குறித்து ஆலோசனை செய்தனர்.
மேலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக அப்பல்லோ மருத்துவமனை சென்று வருகிறார்கள். அவர் கூறும்போது,  முதல்வரை சந்திக்க முடியவில்லை, மூத்த அமைச்சர்களை சந்தித்தோம், முதல்வர் நலமாக இருக்கிறார் என்று பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை  குறித்து டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்றும் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சிறப்பு விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருக்கிறார்.
rahul
இன்று காலை 11 மணிக்கு மேல் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தி அப்பல்லோ வர இருப்பதால்  அப்பலோ மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
இது தீடீரென முடிவெடுக்கபட்ட திட்டமாக கூறப்படுகிறது.