நெல்லை:
டிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார்.
கடந்த 3ந்தேதி ஏடிஎம் மெஷினில் பணம் போடுவதற்காக சென்ற காரின் டிரைவர், அதிலிருந்த ரூ.1,18 கோடி பணத்துடன் காரை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
van
சென்னை கோடம்பாக்கம் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏடிஎம்-ல் பணம் நிரப்பு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் முல்லா மற்றும் பணம் நிரப்பும் ஊழியர்கள் பாபு, சதீஷ், துப்பாக்கி ஏந்திய காவலர் ஜோயல் ஆகியோர் சென்றனர். காரை டிரைவர்  இசக்கிபாண்டி ஓட்டி சென்றார்.
திருவேற்காட்டை அடுத்த வேலப்பன் சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் சதீஷ், பாபு ஆகிய இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றனர். அந்த நேரத்தில் காவரை கடைக்கு அனுப்பிவிட்டு காரில் இருந்த பணத்துடன் காரை எடுத்துக்கொண்டு இசக்கி பாண்டி தலைமறைவானார்.
இதுகுறித்து  உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 5 தனிப்படை அமைக்கபட்டது. தனிப்படை விசாரணையில் காவலரின் கவனத்தை திசை திருப்பி டிரைவர் இசக்கிபாண்டி பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
மேலும் பணத்தை,  வேறு காருக்கு மாற்றி  எடுத்து சென்று உள்ளார்.  இந்த கொள்ளையில் இசக்கிபாண்டியுடன் சேர்ந்து மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

சரண் அடைந்த நீதிமன்றம்
சரண் அடைந்த நீதிமன்றம்

ஏ.டி.எம். பணத்தை எடுத்து சென்ற அந்த காரை, புறப்பட்ட இடத்தில் இருந்தே சொகுசு கார் ஒன்று பின் தொடர்ந்து வந்து உள்ளது.  டிரைவர் இசக்கிபாண்டி பணம் நிரப்பிய ஏ.டி.எம். மையம் முன்பாக காரை நிறுத்தாமல் எதிர் திசையில் உள்ள பூந்தமல்லி சாலையில் நிறுத்தி இருக்கிறார்.
இதுபற்றி ஊழியர்கள் கேட்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி அவர் சமாளித்து உள்ளார். பின்னர் ஊழியர்கள் அனைவரது கவனத்தையும் திசை திருப்பி இசக்கிபாண்டி பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளார்.
இதன் மூலம் அவர் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கிறார் என்பது தெரியவந்து உள்ளது. அவருக்கு துணையாக  இருந்த  நண்பர் குமார் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர்.
கொள்ளை குறித்து தனிப்படை போலீசார் தூத்துக்குடி பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்
டிரைவர் இசக்கி பாண்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சேர்ந்தவன். இவனுக்கு திருமணமாகி பேச்சித்தான் என்ற மனைவி இருப்பது தெரிய வந்தது. அவர் தனது தந்தையுடன் சடையன்கிணறு பகுதியில் இருப்பது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது இசக்கி பாண்டி குறித்த தகவல்கள் கிடைத்தது. இசக்கி முத்துவின் போனை டிரேஸ் செய்து, அவரது நண்பர் குமாரை கைது செய்தனர்.
குமார் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு  ரூ 7 லட்சம் பணம் இருந்துள்ளது கண்ட பிடிக்கப்பட்டது. அது தனது சொந்த பணம் என்று கூறியுள்ளார். குமார் கூறும் தகவல்களை வைத்து இசக்கியின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இசக்கி பாண்டியினின்  மனைவி பேச்சித்தாயையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் காரணமாக போலீசார் தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்த இசக்கி பாண்டியன் இன்று காலை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நேரடியாக சென்று சரணடைந்தார்.