குழந்தைகளுக்கு புத்தி கூர்மை கடத்தப்படுவது தாயின் குரோமோசோம்கள் வழியாகத்தான் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
தாயிடம்தான் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. அதன் வழியாகத்தான் குழந்தைக்கு ஜீன்கள் வழியாக புத்திக்கூர்மை எனும் பண்பு கடத்தப்படுகிறது. ஒருவேளை அப்பாவிடமிருந்து x குரோமோசோம்கள் வந்தாலும் அதில் இருக்கும் புத்திகூர்மை பண்பு தானாக செயலிழந்துவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

momgene

இது தொடர்பாக எலிகளிடம் ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதில் அம்மா வழியாக அதிக ஜீன்கள் செலுத்தப்பட்டபோது பிறந்த குட்டிகள் தலை பெரிதாகவும், உடல் சிறிதாகவும் இருந்திருக்கின்றன. அதே நேரத்தில் ஆண் எலியின் ஜீன்கள் அதிகம் செலுத்தப்பட்டதில் பிறந்த குட்டிகள் உடல் பெரிதாகவும் தலை சிறிதாகவும் பிறந்திருக்கின்றன.
அதாவது தாயிடமிருந்து புத்திக் கூர்மை, சிந்தனை, மொழியறிவு திட்டமிடுதல் போன்ற பண்புகள் கடத்தப்படுவதுபோல, தந்தையிடமிருந்து பசி, செக்ஸ், ஆளுமை போன்ற பண்புகள் கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புத்திக்கூர்மை, திட்டமிடல் ஆகியவற்றுக்கு காரணமான மூளையின் செரிபரல் கார்டெக்ஸ் என்ற பகுதியில் உள்ள செல்களில் தாய்வழி ஜீன்கள் மட்டுமே இருப்பதாகவும் தந்தைவழி ஜீன்கள் அந்த செல்களில் சுத்தமாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது,
மரபு வழியாக புத்திக்கூர்மை கடத்தப்படுவது ஒருபக்கம் இருந்தாலும் இன்னொருபுறம் தாயிடமிருந்துதான் அதிகபட்சமாக அறிவை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.
ஆகவே குழந்தைப்பருவத்தில் குழந்தைகளுக்கு அன்பை மட்டுமல்ல நல்லறிவையும் விதைக்கும் பொறுப்பு தன்னிடமே அதிகம் உள்ளதை உணர்ந்து தாய்மார்கள் செயல்பட வேண்டும்.