பிரெஞ்ச் கயானா:
சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் பல நவீன வசதிகளை மேம்படுத்த உதவும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு சேவைக்காக இந்தியா விண்ணில் ஏவியுள்ள 14 செயற்கைக்கோள்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில்,தகவல் தொடர்பு சேவையை மேலும் சிறப்பாக உருவாக்கும் வகையில், இந்திய விஞ்ஞானிகள் ஜிசாட்-18 என்னும் செயற்கைக்கோளை உருவாக்கினர். இது இன்று அதிகாலை பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து Ariane-5 VA-231 என்ற ராக்கெட் t மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
3 ஆயிரத்து 404 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில், 48 தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மிகவும் துல்லியமான தகவல் தொடர்பு, ராணுவ சேவை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றுக்கு இந்த ஜிசாட்-18 செயற்கைக்கோள் மிகவும் உதவியாக இருக்கும். 15 வருடங்கள் விண்ணில் இந்த செயற்கைக்கோள் பயன்பாட்டில் இருக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, வானில் மேகமூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால், ஜி-சாட் 18 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டு, பிறகு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
Patrikai.com official YouTube Channel