டால்தவில்:
சிரியாவில் திருமண விழாவில் புகுந்து பிரிவினைவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30 பேர் பலி பலியாகினர்.
சிரியாவில் ஹசாகேக் அருகேயுள்ள டால்தவில் என்ற கிராமத்தில் குர்து இன ராணுவ வீரரின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலை படை பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.

இதனால் திருமண விழா களேபரமாக மாறியது. மகிழ்ச்சியாக நடைபெற்றுகொண்டிருந்த திருமண விழா சீர்குலைந்து சின்னாபின்னமானது. அங்குள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியாகினர்.
இத்தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், மேலும் பலர் கவலைக்கிடமாகவும், ஏராளமானோர் காயம் அடைந்ததாகவல் தகவல்கள் தெரிவிக்கிறது. அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
குர்து இன வீரர்கள் பங்கேற்ற திருமண விழாவில் தங்க ளது இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலை படை தீவிர வாதி புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 40 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அரேபிய – குர்தீஸ் கூட்டு படைகள் சிரிய ஜனநாயக படைகளுடன் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பழிவாங்கவே குர்து ராணுவ வீரர் திருமணத்தில், இத்தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel