பெங்களூரு:
காவிரியில் இருந்து இன்றுமுதல் 6  நாட்களுக்கு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி  நீப்  திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வரும் 4 -ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு  ஆணையிட்டுள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவை இரு முறை மீறியுள்ள கர்நாடகா,  இதுவரை தண்ணீரை திறக்கவில்லை.
gandhi_livedayஇதையடுத்து கர்நடாக அரசுக்கு அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தின் முக்கிய எதிர்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவேகவுடா இன்று பெங்களூரு சட்டப்பேரவை முன்பு உள்ள காந்திசிலையின் கீழ் தொண்டர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார்.
காவிரியில்  தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது கட்சித் தொண்டர்கள் , சட்டப்பேரவை பகுதிக்குள் குவிந்துவருகிறார்கள். இதையடுத்து பெங்களூருவில் பதட்டமான சூழல் நிலவுகிறது.