டெல்லி:
நேற்று நள்ளிரவு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாமீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகிறது.
இதையடுத்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவத்தினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத 5க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காஷ்மிரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிரடி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை மந்திரி இந்தியா மீது அணுகுண்டை வீசி அழிப்போம் என்று பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார்.
“இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் எங்கள் நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த நாங்களும் தயாராக உள்ளோம்” என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு.
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோருக்கு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் டெல்லியில் மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக் கட்சிகளின் கருத்தையும் இந்த விஷயத்தில் கேட்டறிய மத்திய அரசு முனைந்துள்ளது.
அவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ள உள்ளது.
Patrikai.com official YouTube Channel