மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை என்ற சர்ச்சைக்குரிய தொழில்நுட்பம் மூலம் மெக்ஸிகோவில் முதல் குழந்தை பிறக்க வைக்கப்பட்டுள்ளது.
mit
இதில் சர்ச்சை என்னவென்றால் தாய் தகப்பன் இருவர் தவிர வேறு ஒருவரிடமிருந்து மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ நன்கொடையாக பெறப்பட்டு சிசு வயிற்றில் உருவாக்கப்படும். இதனால் இது மூன்று பெற்றோருக்கு பிறந்த குழந்தை என்று அழைக்கப்படுகிறது.
மைட்டோகாண்ட்ரியா என்பது நமது உடல் செல்லினுள் இருக்கும் மிக நுண்ணிய அமைப்பு ஆகும். இதுவே உணவை பயன்படுத்தப்படக்கூடிய சக்தியாக மாற்றுகிறது. சில பெண்களுக்கு மைட்டோகாண்ட்ரியா சேதமடைந்த நிலையில் இருக்கும். அப்படி இருந்தால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும்.
ஒரு ஜோர்டானிய தம்பதிகளுக்குத்தான் இந்த சிகிச்சை மூலம் குழந்தை பேறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாய்க்கு மைட்டோகாண்ட்ரியா குறைப்பாட்டால் நான்கு முறை கருச்சிதைவும் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்ததும் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு தடை இருப்பதால் டாக்டர்கள் குழு மெக்ஸிகோவுக்கு சென்று இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.