பிழைப்பின் காரணமாக வெளிநாட்டில் சென்று வசிக்கும் மக்கள் தங்கள் நாட்டு பிரதமரையோ அதிபரையோ சந்திக்க நேர்ந்தால் உற்சாகமடைந்து அவர்களுடன் பேசவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் விரும்புவது வழக்கம்.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த நாவாஸ் ஷெரீப் அப்மமார்க்ட் என்ற இடத்தில் உள்ள ஹாரொட்ஸ் என்ற பல்பொருள் அங்காடிக்கு போகவே அங்கு இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி தனது பிரதமரை பார்த்ததும் பரவசமடைந்து அவரை அணுகி அவரோடு பேச முற்பட்ட போது பிரதமர் ஷெரீஃபின் பாதுகாவலர்கள் அவரை தடுத்து மோசமான விதத்தில் அவரிடம் நடந்து கொண்டுள்ளனர். அவர் ஷெரீபுடன் செல்ஃபி எடுக்க் விரும்பியதாக தெரிவித்த போது அவரது மொபைல் போனும் பிரதமரின் பாதுகாவலர்களால் பிடுங்கப்பட்டிருக்கிறது.
தாங்கள் ஏன் லண்டன் வந்திருக்கிறீர்கள் என்று அவரை சூழ இருந்த பாகிஸ்தானியர்கள் கேட்டபோது ஷெரீப் எரிச்சலடைந்ததாக தெரிகிறது. இந்தக் காட்சியை அங்கிருந்து நேரில் பார்த்த ஷோயப் தைமர் என்பவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பின்புதான் இந்த செய்தி வெளியுலகிற்கு வந்திருக்கிறது.