டெல்லி:
ள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் பணியாற்றி வந்த  ஹிந்தி ஆசிரியரான முகேஷ் குமார் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்திருந்தார். வகுப்பறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
mukesh_kumar
அப்போது திடீரென பள்ளிக்குள் நுழைந்த, நீக்கப்பட்ட பள்ளி  மாணவனும், அவனுடன் சேர்ந்து வகுப்பறையில் இருந்த மாணவனும்  ஆசிரியர் முகேஷ் குமாரை  கடுமையாக தாக்கினர்.
இருவரின் தாக்குதலால்  நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் அவரை அருகிலுள்ள  மருத்துவமனையில்  அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆசிரியர் முகேஷ்குமாரை தாக்கிய இரண்டு மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவனில், ஒரு மாணவன் 18 வயது பூர்த்தியடைந்தவன் என்றும், மற்றொருவனுக்கு இன்னும் 2 மாதத்தில் 18 வயது பூர்த்தியடையும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு மாணவர்களும் பள்ளிக்கு சரியாக வருவது கிடையாது. இதே வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் தோல்வி அடைந்த 6 மாணவர்கள் உள்ளனர்.
அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், அந்த 6 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், தன்னையும் மிரட்டுவதாக, முகேஷ்  ஏற்கனவே கூறியதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளனர்.
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்…..