சென்னை:
மிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ந்தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்பு மனுவுடன்  சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
எஸ்சி எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட (தனித்) தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்பவர்கள், அததுடன்  சாதி சான்றிதழ் இணைப்பது அவசியம்.  மற்றவர்களுக்கு தேர்தலில்  மனு தாக்கல் செய்ய சாதி சான்றிதழ்  தேவையில்லை
local-election-patrikai
கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம்  செய்துக் கொண்ட  பிறப்பால்   எஸ்சி எஸ்டி  பிரிவினை  சாராதவர்கள்  எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை
 
ஆனால்,  மதம் மாறிய பிறப்பால் எஸ்சி எஸ்டி பிரிவினை சார்ந்தவர்கள், எஸ்சி எஸ்டி பிரிவுக்கு  ஒதுக்கப்பட்ட இடத்தில்  போட்டியிடுவதில்  பிரச்சினையுள்ளது
வெளி மாநிலத்தில்   எஸ்சி எஸ்டி  சாதி  சான்றிதழ்  பெற்றவர்கள்  இடம் பெயர்ந்து  (திருமணம் போன்ற காரணங்களால்) தமிழகத்தில்  எஸ்சி  எஸ்டி  பிரிவுக்கு  ஒதுக்கப்பட்ட  இடத்தில்  போட்டியிட  எவ்வித  தடையும்  இல்லை   ஆனால்  அந்தசாதி த மிழக சாதிகள்  பட்டியலில்  எஸ்சி எஸ்டி  அல்லாத  OC  Bc, MBC பட்டியலில்  இருந்தால்  மட்டுமே போட்டியிட இயலாது
– வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு