ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது.
3-hydrail
அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரயில் என்ஜினை இயக்குகிறது.
இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஆல்ஸ்டம் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ரயில் என்ஜின் வருகிற 2017ம் ஆண்டு, ஜெர்மனியில் தற்போது ஓடிகொண்டிருக்கும், ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில் பொறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரம் காட்டி ஹைட்ரஜன் என்ஜினை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]