பெங்களூரு:
னி காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடப்பட மாட்டாது என இன்று கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டுவந்தது.  இதற்கு கர்நாடக மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது.
இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம், பெங்களூருவில் நடந்தது. இதன்பிறகு, கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்தது.
a
இக் கூட்டத்தில், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  காவிரியில் நீர் திறக்கப்பட்டு வந்தது. இனி ஒரு சொட்டு நீர்கூட காவிரியில் திறக்கப்படமாட்டாது. வரும் சனிக்கிழமை அன்று கர்நாடக சட்டமன்றம் கூடும். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்ப வைக்கப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவாசிகள், சாகுபடிக்காக காவிரியில் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், கர்நாடக அமைச்சரவையின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.