மன்னார்குடி:
காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள், கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து நேற்று இரவு அவரது உடல், சொந்த ஊரான மன்னார்குடிக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியை போர்த்துவதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மன்னார்குடியில் இன்று காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மன்னார்குடியில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிபிஐ மகேந்திரன், பாஜக கருப்பு முருகானந்தமும் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
Patrikai.com official YouTube Channel