டில்லி:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மகிந்திரா நிறுவனம் ஜீப் பரிசு வழங்கி கவுரவித்தது.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் பதக்கங்களை வென்று இந்தியா திரும்பிய இருவருக்கும் நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகள் சார்பாக இருவருக்கும் ஏராளமான பரிசுகளும் குவிந்து வருகின்றன. டெண்டுல்கர் கார் வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான மகேந்திரா தார் ஜீப்களை இருவருக்கும் பரிசாக வழங்கினார்.
சிவப்பு கலரிலான மகேந்திரா தார் ஜீப்பை சாக்ஷி மாலிக்கும், சில்வர் கலரிலான மகேந்திரா தார் ஜீப்பை பி.வி.சிந்துவும் பெற்றுக்கொண்டனர்.
Patrikai.com official YouTube Channel